காசா குறித்து ஒரு விதமான நிலைப்பாடு இலங்கை குறித்து வேறுவிதமான நிலைப்பாடு

24 0

இலங்கையின் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டைநிலைப்பாட்டினை பின்பற்றுவதாக இலங்கைக்கான ரஸ்ய  தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை மீது வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள்  இராஜதந்திரிகள் மனித உரிமை அமைப்புகள் அதிகளவு அழுத்தங்களை கொடுப்பதையும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் அவதானித்துள்ளதாக ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிட்ட ஆளுமைகள் மற்றும் அமைப்புகள் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டு கொள்கைகளிற்கு நன்கு அறியப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள ரஸ்ய தூதரகம் இந்த நீதியின் தூதுவர்கள் இந்த விடயத்தை பார்க்கும் விதம் குறித்த தனது குழப்பமான நிலையை மீண்டும் வெளியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

காசா விவகாரத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் பொறுமை  குறித்து இந்த ஆளுமைகளை விமர்சிக்க விரும்புவதாக  ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

காசா விவகாரம் குறித்து ஏன் அவர்கள் பொறுமையாக உள்ளனர் யுகொஸ்லாவியா ஆப்கானிஸ்தான் லிபியா மற்றும் நேட்டோ தனது ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஏற்றுமதி செய்ய விரும்பும் பகுதிகளில் நேட்டோ ஏற்படுத்திய மனிதாபிமான பாதிப்பு குறித்து இந்த சர்வதேச பிரமுகர்கள் ஏன் மதிப்பீடுகளை வெளியிடவில்லை எனவும்  இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

பால்டிக் நாடுகளில் ரஸ்ய மொழிபேசும் சிறுபான்மையினத்தவர்கள் ஒடுக்கப்படுவது குறித்து இவர்கள் ஆராய்வதை எது தடுக்கின்றது எனவும் ரஸ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.