காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்க வட துருவ நாடுகள் நிதியளிக்க தயங்குகின்றன

41 0

உக்ரேனில் ஏற்படும் உயிர் அழிவுகளுக்கு  நிதியளிக்க  தயாராக இருக்கும், உலகளாவிய வட, துருவ நாடுகள் காலநிலையால் ஏற்படும் அழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க தயங்குவதாக 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய வரி ஏய்ப்பு தொடர்பான சொத்துக்களின் வருடாந்த இலாபம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருப்பதால், அந்த இலாபத்தின் மீது, காலநிலை மாற்ற நிதியத்திற்காக 10 சதவீத வரி விதிக்கும் யோசனையை இலங்கை முன்தொழிந்தருப்பதாக 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டு இந்தோனேசியாவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.