ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்தோனேசிய எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர்

59 0

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டின் எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் அரிபின் தஸ்ரிஃப் (Arifin Tasrif) சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே, இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் (Devi Gustina Tobing) ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார்.

பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை நேற்று (18) சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விமான நிலையத்தில்

இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் பாரம்பரிய பாலி நடனக் கலைஞர்களின் நடன நிகழ்வோடும் வரவேற்கப்பட்டபோதே அமைச்சர் அரிபின் தஸ்ரிஃபின் இந்த சந்திப்பு  இடம்பெற்றது.

10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வு மே 18  – 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் “கூட்டு செழுமைக்கான நீர்” என்ற தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், நாளை திங்கட்கிழ‍மை 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

அத்தோடு, இந்த இந்தோனேசிய விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் பிரபலமான வர்த்தகர் எலோன் மஸ்க்கை இன்று (19) சந்தித்தார்.

அதனை தொடர்ந்து, இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.