இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் 120.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2023) இந்த காலப்பகுதியில், காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு 85.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது.இந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் (2023) இக்காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் இந்த காலப்பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு 34.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் காய்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.