பொதுஅபிலாசைகளை வெளிக்கொணரும் வகையில் ஒன்றிணைந்து நடந்துகொள்வோம்

48 0

வட, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் கொள்வோம் என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (18) விக்னேஸ்வரனின் யாழ்.இல்லத்தில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் தர்மவழி நின்றவர்கள் 14 வருடங்கள் அடங்கிப் போனார்கள். 15ம் ஆண்டில் அவர்கள் எழுச்சி பெற்றதைப் பார்க்கின்றோம்.

அதேபோல் எமது தமிழ் உறவினர்களிடையே உணர்வுபூர்வமான எழுச்சியை வடகிழக்கு மாகாணங்களிலும்ரூபவ் கொழும்பிலும் இன்னும் சில இடங்களிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

எமது புலம் பெயர் உறவுகள் நாட்டுக்கு நாடு நின்று இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மனதில் நிறுத்தி இந் நாளை ஒரு கருநாளாக கருதி நிற்கின்றனர்.

14 வருட எமது வனவாச காலம் முடிவுக்கு வந்துள்ளது. இவ்வருட நினைவேந்தல் வாரமும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தும் கால கட்டமும் இணைந்து வந்துள்ளன. எம் சார்பில் உலகில் பல நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. எமது அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை ஆதரிக்க முன் வந்துள்ளன.

அரசாங்கம் கூட நினைவேந்தலைத் தடைசெய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளது. இனஅழிப்பு பற்றிய எமது ஆங்கில நூல் இக்கால கட்டத்திலேயே வெளிவந்துள்ளது. தமிழரின் விடிவு காலம் இவ் வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன்.

எம்மக்கள் இனியும் வாளாதிருக்கக்கூடாது. வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாi~களை வெளிக் கொண்டுவரும் விதத்தில் இனியேனும் நடந்து கொள்வோமாக. இவ்வருடம் உள்நாட்டுரூபவ் வெளிநாட்டு தமிழ் உறவுகளின் வாழ்வில் ஒரு முக்கியமான வருடமாகப் பரிணமிக்கட்டும் என்றார்.