முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் பூட்டு

57 0

உணர்வுபூர்வமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வர்த்தக நிலையங்களை பூட்டி வியாபாரிகள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன.

சேவைச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதையும்  அவதானிக்க முடிகிறது.