கடந்த 15.05.2024 அன்று டென்மார்க் தலைநகர் Kongens Nytorv சதுக்கத்தில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வானது, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் Kongens Nytorv சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இன அழிப்பில் உயிர்நீர்த்த மக்களை நினைவுகூர்ந்து ஆரம்பமான இந் நிகழ்வில், 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை, டெனிஸ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையிலான கவனயீர்ப்பாக இன்றும் அமையப்பெற்றது.
தாயகத்தில் எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பறைசாற்றும் விதத்தில் பதாதைகள், விவரணப் படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் முலம் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இளையோர் அமைப்பினரும் பரப்புரைகள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து நாளை 18.05.2024 அன்று தமிழின அழிப்பிற்கான நீதி கோரி நடைபெறவுள்ள எழுச்சிப் பேரணியில், எம் நீதிக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க, நாம் அனைவரும் தமிழீழத் தேசிய மக்களாய் அணிதிரள்.