இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள பொதுமக்களின் 17.5 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் 4.5 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
கடந்த பதின்மூன்றாம் திகதி பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றை கையளித்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த மனு தொடர்பில் பதிலை எதிர்பார்த்து இன்று முற்பகல் பத்து மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தபோதே அரசாங்க அதிபர் குறித்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை பொதுமக்களின் ஆவணங்களை உடனடியாக பரிசீலனை செய்து அவர்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவத்துள்ளார்.