நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சலின் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போலி வைத்தியர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 1907 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் வைத்திய துறை தொடர்பில் எந்தவித முன் அனுபவமும் திறனும் இல்லாதவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.