எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறக்கப்பட்டது!

72 0

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ், மிகுந்த அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் (17) மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரித்துள்ளது.

எனவே, எந்த நேரத்திலும் குறித்த வீதி மீண்டும் மூடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.