எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறக்கப்பட்டது!

41 0

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி  போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் வாகனங்களைக் கவனமாகச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

எவ்வாறாயினும், இன்றும் மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அப்படியானால், எந்த நேரத்திலும் இந்த வீதி மீண்டும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .