கிளிநொச்சியில் இரு பாடசாலை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு

50 0

கிளிநொச்சியில் தற்போது நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய இரண்டு பாடசாலை மாணவர்கள் பரீட்சை நிறைவு நாள் அன்று தங்களது பாடசாலைகளில் சிரமதானம் செய்து சுத்தம் செய்ததோடு ஞாபகார்த்தமாக மரக்கன்றுக்களையும் நாட்டி பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர்.

இந்த முன்மாதிரியான நிகழ்வு கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட் செல்வாநகர் அரச தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கோணாவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலும் பரீட்சை நிறைவு நாள் அன்று தங்கள் ஆடைகளில் சாயங்களை பூசி, பாடசாலை சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்து செல்லும் நிலைமைகள் தற்போது அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் மேற்படி இரண்டு பாடசாலைகளிலும் இடம்பெற்ற இந்த முன்மாதிரியான செயற்பாடுகள் இளம் சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தூண்டியிருக்கிறது.

எனினும் அதிபர்கள், ஆசிரியர்கள் குறித்த மாணவர்களுடன் மேற்கொண்டுள்ள அனுகுமுறையே மாணவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.