சட்டவிரோதமாக இலங்கையர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்த இருவர் கைது!

32 0

ரஷ்யா இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்ப்பட்டதையடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமத்தை இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களைச் சுற்றுலா விசா மூலம் ரஷ்யாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒவ்வொரு நபர்களிடமிருந்தும் தலா 15 இலட்சம் ரூபா பணம் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள்  ரஷ்யா -உக்ரைன் போர்க் களத்திற்குக் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பில்  இதுவரை 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இந்நிறுவனத்தினால் கிட்டத்தட்ட  ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகளவான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.