கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து கலந்து கொள்ளவில்லை.
குறித்த கூட்டம் இன்று (15.05.2024) காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர், திணைக்கள பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.