பல குற்றச்செயல்களுடன் “மன்னா ரமேஷ்“ துபாயில் கைது செய்யப்பட்ட போது துபாய் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது .
இந்நிலையில் , “மன்னா ரமேஷ்“ நாட்டிற்கு அழைத்து வரப்படும் வரை பொலிஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது .
மேலும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பல குற்றவாளிகள் பல கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .