இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்க திட்டமொன்று காணப்படுவது அவசியம் என தெரிவித்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறும் தலைவர்கள் இதனை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய கடன்மறுசீரமைப்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா அபிவிருத்தி சகாவாக விளங்குவதற்கு தயார் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஆலோசனை மற்றும் கடனை வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை இலங்கை தொடர்ந்தும் வலுப்படுத்தவேண்டும் என அமெரிக்கா ஊக்குவிக்கின்றது ஆரோக்கியமான போட்டிதன்மையை பேணுவதற்கு வெளிநாட்டு தரப்புகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு இலங்கை வாய்ப்புகளை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளை பொதுமக்களிற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.