இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, கட்டகேவத்த பகுதியில் குற்றப்புலனாவு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார் .
இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 2,50,000 ரூபா பெறுமதியான 1,600 சட்டவிரோத சிகரெட்டுகளை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், இவர் விசாரணைக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .