தென்னிலங்கை கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை காணவில்லை

56 0

தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகளில் ஒன்றின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரை கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த திரிலோகநாதன் என்பவரே கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த கட்சியின் தீவக தொகுதி அமைப்பாளர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை ஏமாற்றி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.