முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஆணின் சடலம்

61 0

முல்லைத்தீவு   முறிகண்டி பகுதியில் ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது, இன்றையதினம் (13.05.2024) முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள ஆட்களற்ற காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.