ஹட்டன் புகையிரத நிலையத்தில் காணப்பட்ட பயணி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹட்டன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்காகக் காத்திருந்த நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஹட்டன் புகையிரத நிலையத்தில் பயணம் செய்ய காத்திருந்த நபர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தவாறு உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் சோதனையிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
வட்டவளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.