யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

60 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (13) விநியோகிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். சிறுவர்களும் வயதானவர்களும் சொல்ல முடியாத பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாயினர். வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை காத்தது. அந்த நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.