உக்ரைன், ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷிய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.இந்நிலையில், ரஷியாவின் பாதுகாப்பு மந்திரியான செர்ஜி ஷோய்கு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு மந்திரியாக பெலோசோவ் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதிபர் புதின் மேற்கொண்ட மிக முக்கியமான ராணுவ மறுசீரமைப்பு இது என கருதப்படுகிறது.
இதற்கிடையே, செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக அதிபர் புதின் நியமித்துள்ளார். செர்ஜி ஷோய்கு அதிபர் புதினின் நீண்டகால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.