வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிரிபாவ ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயகுமார என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சந்தேக நபரான பெண், தனது கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை முதுகில் சுமந்து கொண்டுசென்று கிரிபாவ ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.