நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாகவும் அவர்களும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் பேசிய காணொலி ஒன்று சமீபத்தில் வைரலானது. அவரது பேச்சை பாஜக-வினர் விமர்சித்து வரும் நிலையில் மணிசங்கர் ஐயரின் கருத்தில் உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (மே.13) வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில்இ தெலங்கானாவில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஇ நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
“அணுகுண்டு மீதான பயம் காரணமாகஇ அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான நமது உரிமைகளை விட்டுக்கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம். பாகிஸ்தானின் தோட்டாக்களுக்கு பீரங்கிகளால் பதில் அளிக்கப்படும்.”
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.