கதிர்காமம் பாதயாத்திரியர்களுக்கான நலனுதவி செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடல் கூட்டம்

61 0

கதிர்காம திருத்தலத்திற்காக உகந்தமலை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இருந்து காட்டுவழிப் பாதை வழியால் கதிர்காமம் செல்லும் தல யாத்திரியர்களுக்கான

விசேட பாதுகாப்பு மற்றும் நலனுதவி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் அம்பாறை

ஆலையடிவேம்பில் இடம்பெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் கு.ஜெயராஜின் ஏற்பாட்டில் இக் கூட்டம் நடைபெற்றது.

கதிர்காமம் பாத யாத்திரியர்களின் பாதுகாப்பு மற்றும் குடிநீர் விநியோகம்

உள்ளிட்ட பலவேறு நலனுதவி செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன

இம்முறை பாத யாத்திரியர்களுக்கான நாட்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் வன விலகுகளைப் பாதிக்கும் வகையில் ஒலி எழுப்புதல் பொலித்தின் பாவனைகள்

மற்றும் மரங்கள் வெட்டுதல், தீ வைத்தல் போன்ற செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் துறைசார் அரச திணைக்கள அதிகாரிகளால்

கடுமையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்,

லாகுகல பிரதேச செயலாளர் நவநீதராஜா மற்றும் மாவட்ட பிரதேச இந்துசமய கலாசார அலவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள்

தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் என பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.