வழக்குகளை நிவர்த்திப்பது தொடர்பில் கலந்துரையாடல்

444 0

201503170237163542_Kind-seks-geval-Argiewe-Verslag-van-die-Hooggeregshof-Filing_SECVPF.gifஇந்தியாவில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அந்த நாடு எவ்வாறு நிவர்த்தித்துக்கொள்கிறது என்ற அனுபவப்பகிரல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான சந்திப்பொன்று ஆகஸ்ட் 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை இந்தியாவின் போபால் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கையின்  நீதிச்சேவை அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த அமர்வுகள், இந்தியாவின் பிரதமநீதியரசர் டி எஸ் தாகூரின் தலைமையில் இடம்பெறவுள்ளன.
இந்தியாவில் மேம்பட்டுள்ள இணையக் குற்றங்களுக்கான சட்டங்கள் உட்பட பல்வேறு சட்ட நடைமுறைகள் மற்றும் சாட்சிகளின் உண்மைத் தன்மை, நீதித்துறை ஒழுக்கங்கள் போன்ற விடயங்கள், இந்த அமர்வின்போது கலந்துரையாடப்படவுள்ளது.