“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா. யேர்மனி,டோட்முண்ட் (Dortmund)

314 0

11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “பேசுவோம் போரிடுவோம் “எனும் நூல் யேர்மனியின் டோட்முண்ட் (Dortmund) நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளைப்பொறுப்பாளர் திரு. சிறீரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் நினைவுப்படத்திற்கு திருமதி.தீபா இரவிச்சந்திரன் அவர்களும் மே18 தமிழின அழிப்பு நினைவுப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு டோட்முண்ட் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு.செல்லையா பாலகிருஸ்ணன் அவர்களும் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் மலர் சுடர்வணக்கம் செலுத்தினார்கள்.
நூல் வெளியீட்டு விழாவின் அடுத்தநிகழ்வாக மங்கல விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டது.

-திரு.நாகேநத்திரராசா சுஜீந்தன்
– திருமதி கிருபாரதி சிவராம் – தமிழ்பெண்கள் அமைப்பு

– திரு.சின்னையா நாகேஸ்வரன்-
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மத்தியமாநிலம் 1 இன் பொறுப்பாளர்.

– திரு மார்க்கண்டு பாஸ்கரமூரத்தி
தமிழ்க் கல்விக் கழக கலைப்பிரிவுப் பொறுப்பாளர்.

– செல்வன் சயந்தன் கேதீஸ்வரன்
தமிழ் இளையோர் அமைப்பு-யேர்மனிப் பொறுப்பாளர்

– திரு செல்லர் தெய்வேந்திரம்
தமிழ்க்கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்.

– செல்வன் இரட்ணராஜா மிதுனன்
– தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு துணைப்பொறுப்பாளர்.

– திரு ஜெயா வைரவநாதன்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி-வெளியீட்டுப்பிரிவுப்
பொறுப்பாளர்.

– திரு சதாசிவம் சிறிக்கந்தவேல்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மத்தியமாநிலம் 2 இன் பொறுப்பாளர்.

– திரு குமாரசாமி ஜெயக்குமார்
தமிழர் கலையகம் டோட்முன்ட் – டோட்முன்ட்

ஆகியோர் மங்கல விளக்குகளை ஏற்றிவைத்தபின் அகவணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

முதலில் வரவேற்புரையினை யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அமைப்பினைச் சார்ந்த திருமதி. சசினா சசிரதன் அவர்கள் வழங்கினார். வரவேற்பு நடனத்தினைத்தொடர்ந்து யேர்மன் கல்விக்கழக மத்தியமாநில துணைச்செயற்பாட்டாளர் திருமதி.கலையரசி இலிங்கேஸ்வரன் அவர்களளின் தொகுப்புரையின் பின்னர் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் நூலாசிரியர் திரு.க.வே. பாலகுமாரன் அவர்கள் பற்றிய அனுபவப்பகிர்வினை வழங்கியிருந்தார்.
நூல் வெளியீட்டு வாழ்த்துரைகள் டோட்முண்ட் தமிழாலய ஆசிரியர் திருமதி. நகுலா சிவநாதன் மற்றும் எழுத்தாளர் திரு.விமலசேகரம் சபேசன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.

“பேசுவோம் போரிடுவோம் “நூல் பற்றிய ஒரு விரிவான ஆழமான மதிப்பீட்டுரையினை நூல் மதிப்பீட்டுரைஞர் திரு.நாகேந்திரராசா சுஜீந்தன் அவர்கள் சிறப்பாக வழங்கியிருந்தார்.
தொடர்ந்து ஏற்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் வழங்கியிருந்தார்.
தமிழ்க்கல்விக்கழக கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் வெளியீட்டுரையோடு வெளியீட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் வை. ஜெயா அவர்கள் நூலினை வெளியிட்டு வைக்க சிறப்புவருகையாளர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து வருகை தந்திருந்தவர்கள் விழாமேடையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சங்கர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
“பேசுவோம் போரிடுவோம் “நூல் வெளியீட்டு விழாவானது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையின் பொறுப்பாளர் திரு.சிறீரவீந்திரநாதன் அவர்களுடைய சிறப்புரையோடும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்தோடும் இனிதே நிறைவடைந்தது.