யாழ்ப்பாணம்- நல்லூரில் முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக ( 11.05.2024 ) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் சிங்கள பேரினவாத அரசினால் கொல்லப்பட்ட மக்களுக்கு தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் முன்பாக சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் அகப்பட்ட மக்களின் பசியைப் போக்க கஞ்சி வழங்கப்பட்டமையை நினைவுகூறும் முகமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.