வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 1180 வகையான சட்டவிரோத சிகரெட்டுகளை அனுமதியின்றி இலங்கைக்குக் கொண்டு வந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையின் மேற்கொண்ட யுக்திய நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.
இவரிடமிருந்து பல வகையான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைதானவர் மேலதிக விசாரணைக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.