பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (8) உத்தரவு வழங்கியது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் காணப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று வியாழக்கிழமை (9) சபையில் அறிவித்தார்.
அதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.