ஜப்பான் – இலங்கைக்கு இடையிலான நல்லுறவு பலப்பட்டுள்ளது

260 0

ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவு தற்போது பலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – ஜப்பான் நாடாளுமன்றங்களின் நட்புறவு சங்கத்தின் தலைவர் வடாறு டெகேஷிடா இதனை தெரிவித்துள்ளார்.

உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் சென்றுள்ளார்.

பிரதமரை வரவேற்கும் நிகழ்வு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீண்டகாலமாக நிலவும் இலங்கை ஜப்பானுக்கிடையிலான உறவானது பிரதமரின் ஜப்பான் விஜயத்தினையடுத்து தற்போது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.