மல்லாவி – பாலிநகர் கிராமத்தில் பாம்பு தீண்டி சிறுவன் பலி

442 0

மல்லாவி – பாலிநகர் கிராமத்தில், வீதியில் சென்ற பாம்பின் மீது துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் சறுக்கி வீழந்த போது, பாம்பு சிறுவனை தீண்டி ஆபத்தான நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையிலும் பின்னர் கிளிநொச்சி, அனுராதபுரம், ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அளவில் சிறுவனை பாம்பு தீண்டிய நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான்.

பாலிநகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் சிறுவன் பயணித்த வேளை வீதியின் குறுக்கே சென்ற பாம்பைக் கண்டு பதட்டம் அடைந்த நிலையில் திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட போது துவிச்சக்கர வண்டியின் சக்கரம் பாம்பின் மீது ஏறிசறுக்கி போது சிறுவன் பாம்பின் மேல் வீழ்ந்துள்ளான்.

இதன் போது, பாம்பு சிறுவனின் பின் தலையில் பலமா தீண்டியுள்ளது, விசம் தலைக்கேறிய நிலையில் வீதியால் சென்ற பொதுமக்களினால் மீட்கப்பட்டு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக அதிதீவிர சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிற்கு மாற்றப்பட்டு பின்னர் விசேட சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவத்தில் பாலிநகர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான முஃபாலிநகர் மகா வித்தியாலயத்தில் தரம் 6 கல்வி பயிலும் நாகேஸ்வரன் – விதுசன் என்ற சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.