தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம்
என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது.
நூலின் அறிமுக உரையினை திரு.றகு அவர்கள் நிகழ்த்த மதிப்பீட்டு உரையினை தமிழ்க்கலை அறிவு கூட தலைமை ஆசிரியர் திருமதி குமுதா இளமுருகன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து நூலினை தமிழர் ஒருங்கினைப்பு குழு பெல்சிய கிளைப்பொறுப்பாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க நூலின் முதல் பிரதியினை பெல்சிய கிளையின் மாவீரர் பனிமனைப்பொறுப்பாளர் செல்வன் கிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.பின்னர் எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்று இனிது நிறைவு பெற்றது.