அமெரிக்காவில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட விமான பயணி

392 0

அமெரிக்காவில் சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமான பயணி ஒருவர் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சிகோகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளால் நிரம்பி வழிந்தது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதை கண்டறிந்த அந்த விமான நிறுவனம், 4 பயணிகளை தாமாக முன்வந்து இறங்குமாறு கேட்டுக்கொண்டது.

அப்படி இறங்குகிற பயணிகளுக்கு தலா 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) தருவதாக கூறியது. யாரும் முன்வரவில்லை. அடுத்து தலா 800 டாலர் (சுமார் ரூ.52 ஆயிரம்) தருவதாக கூறியது. அப்படியும் யாரும் முன்வரவில்லை.

கடைசியில் அந்த நிறுவனமே 4 பயணிகளை தேர்ந்தெடுத்து வெளியேற்ற முடிவு செய்தது. அதன்படி 3 பயணிகள் வெளியேறினர். 4-வதாக வெளியேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பயணி வெளியேற மறுத்தார். அவர் “நான் வீட்டுக்கு செல்ல வேண்டும், வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று கதற கதற விமானத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது உதட்டில் ரத்தம் வடிந்தது.

இதை ஒரு பயணி ரகசியமாக படம் பிடித்து ஆன்லைனில் வெளியிட அது வைரலாக பரவியது. அதைக்கண்டவர்கள் விமான நிறுவனம் மீது ஆத்திரம் அடைந்தனர். இனி அந்த விமான நிறுவனத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இதையடுத்து அந்தப் பயணியை இழுத்து சென்ற விமான பாதுகாப்பு ஊழியர் விடுமுறையில் அனுப்பப்பட்டார் என தெரிய வந்துள்ளது.