ராஜபக்ஷக்களுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் மக்கள் போராட்டம் பலம் பெற்றதையும், ராஜபக்ஷக்கள் பதவிகளை விட்டு தப்பிச் சென்றதையும் மறந்து விட்டார்கள்.
பொருளாதாரப் படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷக்களை முன்னிலைப்படுத்தியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது
இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் ராஜபக்ஷக்களுக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது.பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எவருமில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ராஜபக்ஷக்கள் செயல்படுகிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது.
ராஜபக்ஷக்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக் கொள்ளக் கூடாது.
ராஜபக்ஷக்களிடமிருந்து விலகிச் செயல்படுவது ஜனாதிபதியின் அரசியலுக்கு சிறந்ததாக அமையும் என தெரிவித்துள்ளார்.