மனைவி வெளிநாடு சென்றதையடுத்து தனது 4 வயது மகளைத் தாக்கி காயப்படுத்தி அதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தை 27 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் சிறுமி, தனது தந்தை மற்றும் தாயின் பெற்றோரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.