சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தாங்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நடிகை தமிதா அபேரத்ன, தனது அரசியல் செயற்பாடுகளுக்கு அரசியல் கட்சியொன்று இடையூறு விளைவிப்பதாக தெரிவித்தார்.