நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை – அர்ஜூனரணதுங்க

47 0

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச கலந்துகொண்ட மேதின பேரணியில் அர்ஜூனரணதுங்க கலந்துகொண்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தனது கட்சி ஏற்பாடு செய்திருந்த மேதின பேரணிக்கு என்னை அழைத்திருந்தார் என குறிப்பிட்டுள்ள அர்ஜூன ரணதுங்க அந்த பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யவில்லை நான் அந்த கட்சியில் இணையவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் காணப்படும் ஊழலை ஒழிப்பதற்கு சஜித்பிரேமதாச மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் காணப்படும் ஊழலிற்கு எதிராக பேசினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.