களுத்துறையில் உணவகங்களில் விசேட சோதனை!

47 0

களுத்துறை, பலாதோட்ட மற்றும் கட்டுகுருந்த ஆகிய பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் நேற்று (2) விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிரதேசங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய பேருவளை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன்போது தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.