தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டே சகல அரசியல் கட்சிகளும் மே தின கூட்டத்தை நடத்தின.எந்த கூட்டத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி பேசப்படவில்லை.கட்சியின் அரசியல் பிரச்சினைகள்,ஜனாதிபதி தேர்தல் பற்றியே கவனம் செலுத்தப்பட்டது.
தின கூட்டத்தை நாங்கள் நடத்தவுமில்லை,எந்த கட்சிக்கு சார்பாக செல்லவுமில்லை.எமது கட்சியின் தேசிய சம்மேளம் வெகுவிரைவில் நடத்தப்படும் இதன்போது தொழிலாளரின் உரிமைகள் பற்றி விசேட திட்டங்களை முன்வைப்போம்.
சகல அரசியல் கட்சிகளும் பிரமாண்டமான முறையில் மே தின கூட்டத்தை நடத்தின.தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் மாத்திரமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.அவர்களின் கூட்டத்தில் தான் பெருமளவிலானோர் கலந்துக் கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியினர் பழைய மாக்சிசவாத கொள்கையில் இருந்து விடுபட்டு நவீன அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய செயற்பட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என்றார்.