ஏற்றுமதி செய்வதற்க்கான தரச் சான்றிதழை வழங்கும் நிறுவனம் யாழில் திறந்து வைப்பு

48 0

உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தரச் சான்றிதழைப் வழங்கும்   நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொன்றோள் யூனியன் (CONTROL UNION) என்ற நிறுவனம்  யாழ்ப்பாணம் செட்டித்தெரு இல.40 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ. ஜெயசேகரம்  கருத்து தெரிவிக்கையில்

வடமாகாணத்திலுள்ள  உற்பத்தியாளர்கள் விவசாயம் உணவு உற்பத்தி போன்ற பல வகையான உற்பத்திகளுக்கான உற்பத்தி தரச் சான்றிதழை வழங்குவதற்கு இந்த நிறுவனம் தயாராகவுள்ளது.

உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கான தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளையும் , தரச் சான்றிதழ்களுக்கான ஆய்வுகள் செய்து வழங்குவார்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பவர்களும் இந்த நிறுவனத்தின் தரச் சான்றிதழைப் பயன்படுத்தி தரத்தை உயர்த்தி பொருட்களை எற்றுமதி செய்யமுடியும்.

ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான தரச் சான்றிதழ்களைப் பெற்று அனுப்புகின்றபோது குறித்த உற்பத்திப் பொருட்களை தங்கு தடையின்றி தொடர்ந்தும் அனுப்பக்கூடியதாக இருக்கும்.

வடக்கு மாகாணத்தில் இருந்து ஏற்கனவே பல நிறுவுனங்கள் இந்தச் தரச் சான்றிதழ்களை கொழும்பு சென்றே பெற்று பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வியாழக்கிழமை  இந்த நிறுவனம் இங்கு ஆரம்பித்துள்ளமையினால் ஏனைய உற்பத்தியாளர்களும் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி தரச் சான்றிதடைகளைப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளமுடியும் எனவே  உள்ளுர்  உற்பத்தியாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த  நிகழ்வில்  இந் நிறுவனத்தின் முகாமத்துவ பணிப்பாளர் றொசான் றணவக்க ,வர்த்தக முகாமையாளர் சுனர விக்கிரமாராச்சி மற்றும் நிறுவன அதிகாரிகள்,யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ,ஜெயசேகரன்,மாகாண கைத்தொழில்  அபிவிருத்தி பணிப்பாளர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.