கொழும்பு விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துவரும் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவையோ அல்ல இந்தியாவை தளமாக கொண்டவையோ அல்ல என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதா என்ற ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்து விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தின் விசா வழங்கும் நடவடிக்கைகளை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என பதிவுகளும் கருத்துக்களும் வெளியாகியுள்ளதை அவதானித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவையோ அல்லது இந்தியாவை தளமாக கொண்டவையோ இல்லை. அந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இந்தியாவில் இல்லை வேறு எங்கோ உள்ளன இதன் காரணமாக இந்த விடயத்தில் இந்தியாவை குறிப்பிடுவது தேவையற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.