இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோயிலின் முன்பாக 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவுசுமந்த கவிதைப்போட்டி மெய்நிகரூடாக 28.04.2024 அன்று உணர்வுடன் நடைபெற்றது.
தியாகதீபம் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கத்துடன் போட்டி ஆரம்பமாகியது.
இக்கவிதைப்போட்டி கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு மற்றும் அதிமேற்பிரிவு என நான்கு வயதுப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்றது.
கீழ்ப்பிரிவில், பங்குபற்றியவர்களில்
முதலாவது இடம்: செல்வி ஆரணி தாமோதரம்பிள்ளை -தமிழாலயம்-Leverkusen
இரண்டாவது இடம்: செல்வன் கவினயன் ரூபன் -தமிழாலயம்-Essen
மூன்றாவது இடம்: செல்வி ஜெயாணி இராமகிருஸ்னண் Kevelaer
மத்தியபிரிவில் பங்குபற்றியவர்களில்
முதலாவது இடம்: செல்வி அபிகாயில் சசிறதன் -தமிழாலயம்-Dortmund
இரண்டாவது இடம்: செல்வன் ஸ்ரெபான் ஆயுடிக் வசந்தராஜ் -தமிழாலயம்-Dortmund
மூன்றாவது இடம்: செல்வன் சவீன் வீரசிங்கம் -தமிழாலயம் – Dortmund
மேற்பிரிவில் பங்குபற்றியவர்களில்
முதலாவது இடம்: செல்வி அபிநயா நாவேந்தன் -தமிழாலயம்-Oberhausen
இரண்டாவது இடம்: செல்வி லோறேனா அன்ரன் -தமிழாலயம்-Mettingen
அதிமேற்பிரிவில் பங்குபற்றியவர்களில்
முதலாவது இடம்: திரு.கிருபாமூர்த்தி சபேசன் Kirchseeon ( München)
இரண்டாவது இடம்: திருமதி வத்சலா தவக்குமார் Essen
மூன்றாவது இடம்: திரு வரபதி சஞ்சயன் Mönchengladbach
ஆகியோர்கள் போட்டியில் பங்குபற்றியவர்களில் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.
போட்டியின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தாரகமந்திரத்துடன் கவிதைப்போட்டி நிறைவுபெற்றது.