முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 31 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு தருமபோதனை இடம் பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (30 ) ஆம் திகதி மாலை மொரட்டுவ, லுனாவ, ஸ்ரீ போதிராஜாராம விகாராதிபதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்கள கற்கைகள் துறைப் பேராசிரியருமான சங்கைக்குரிய அகலகட சிரிசுமண தேரரினால் ஶ்ரீ சுச்சரித மண்டத்தில் தர்ம போதனை நிகழ்த்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் திருமதி ஹேமா பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.