மே தின நிகழ்வில் கலந்துகொள்ள கொட்டகலை சென்றார் ஜனாதிபதி ரணில்

54 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வரவேற்றார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் இன்று புதன்கிழமை (01) காலை கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் இணைந்துகொண்டுள்ளார்.

அதன் பின்னர் இன்று (01) பிற்பகல் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸுக்கு முன்பாக நடைபெறும் ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.