அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைகழகத்தில் பதற்றம் – 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் கைது

69 0

அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைகழத்தின் வளாகத்திலிருந்து பாலஸ்தீன ஆதரவாளர்களான மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைகழகத்தின் கட்டிடத்தை பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் ஆக்கிரமித்து 24 மணிநேரத்தின் பின்னர் அவர்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்களை கைவிலங்கு அணிவித்து பொலிஸார் பேருந்தில் அழைத்து செல்கின்றனர்

மாணவர்கள் வெட்கம் வெட்கம் என கோசங்களை எழுப்புகின்றனர்.

இரண்டு வாரங்களாக பல்கலைகழகத்தை சுற்றி முகாமிட்டிருந்த  பாலஸ்தீன ஆதரவு மாணவர்களையும்  பல்கலைகழக கட்டிடத்திற்குள் நுழைந்தவர்களையும் அங்கிருந்து அகற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல்கலைகழகத்தின் இரண்டாவது மாடி ஊடாக ஏணிகளை பயன்படுத்தி பொலிஸார் பல்கலைகழகத்திற்குள் நுழைந்தனர்.

பல்கலைகழகத்திலிருந்து வெளியேறுவதற்கு பல்கலைகழக நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாததை தொடர்ந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கு பொலிஸாருக்கு பல்கலைகழக நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.

இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என கோரி அமெரிக்காவின் பல பல்கலைகழங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.