இன்புளுவென்ஷா நோயினால் இளம் பெண் மரணம்

300 0
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 08ம்திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் தோப்பூர்-அல்லை நகர் பகுதியைச்சேர்ந்த எஸ்.றிமாஸா (32வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் கொழும்பு எம்.ஆர்.ஜ.பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்த வேளை இப்பெண்ணுக்கு இம்புளுவென்ஷா H1N1 இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.