மூடப்படும் ரேசன் கடைகள் – புத்தக வெளியீடு & கருத்தரங்கம்

486 0

ரேசன் கடைகளை மூடக் கூடிய ஒப்பந்தத்தில் உலக வர்த்தகக் கழகத்தில்(WTO) இந்திய அரசு கையெழுத்திட்டதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் “மூடப்படும் ரேசன் கடைகள்” என்ற புத்தகம் மே பதினேழு இயக்கம் சார்பில் நிமிர் பதிப்பகத்தினால் சென்னையில் 09-4-2017 ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை தோழர் சா.காந்தி அவர்கள் ஆதாரங்களுடன் விளக்கி எழுதியுள்ளார்.

மேலும் உலக வர்த்தக கழகத்தின் இந்த ஒப்பந்தம் குறித்து விளக்கமான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

ஆந்திர அரசினால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு(7-4-2015) நினைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் திரு வெள்ளையன், மூத்த பொறியாளர் சங்கத்தின் திரு.வீரப்பன், தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பின் திரு.சா.காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் லெனா குமார், அருள்முருகன், திருமுருகன், பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

புத்தகத்தினை வீரப்பன் அவர்கள் வெளியிட வெள்ளையன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வின் காணொளி பதிவுகள்