பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட ஆற்றில் அகழப்பட்ட மாணிக்ககல் கொண்டதாக கருதப்படும் மண் தேசிய இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட ஆற்றில் அகழலப்பட்ட மண் தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையினரால் இன்று (11) கைப்பற்றபட்டுள்ளதாக அதன் பணிப்பாளப் அமரசிறி தெரிவித்தார்.
சமுர்த்தி நிறுவனத்தின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் அனுமதியோடு கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆற்றினை அகலபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து கடந்த 09 ஆம் திகதி இயந்திரங்களை கொண்டு குறித்த ஆற்றினை அகலபடுத்தி கொண்டிருந்த போது மாணிக்கல் அகழ்வுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் கடந்த இரண்டு தினங்களாக மக்களுக்கு மத்தியில் அமையின்மையும் ஏற்பட்டமையில் மாணிக்கல் அகழ்விற்கு பறிக்கப்பட்ட இல்ல கற்களை தேசிய இரத்தின கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையிடம் நேற்றைய தினம் ஒப்படைக்கபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குவிக்கபட்ட மாணிக்ககல் கொண்ட மண்வகைகளை தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையினர் இன்று கைப்பற்றியுள்ளதாக அதன் பணிப்பாளர் அமரசிறி தெரிவித்தார்.
கைப்பற்றபட்ட மாணிக்ககல் கொண்ட மண் வகைகள் வேறு ஒரு திகதியில் ஏலவிற்பனை செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்ததோடு ஆற்றினை அகலப்படுத்தும் நடவடிக்கை தடை செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.