ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவித்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலிருந்து பிராந்திய அபிவிருத்தி திட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக, உறுப்பினர்களால் நேரடியாக ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி 85 திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.